ஆன்லைன் வகுப்புகளை நடத்தும் போது பின்பற்றப் பட வேண்டிய வழிகாட்டுதல்கள்.


பள்ளி, கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் முறையாக நடைபெறுவதை கண்காணிப்பது குறித்து மாண்புமிகு முதலமைச்சா் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பின்வரும் முடிவுகளையும், உத்தரவுகளையும் மாண்புமிகு முதலமைச்சா் அவர்கள் அறிவித்துள்ளார்கள்.


👉இணைய வழியாக நடத்தப்படும் வகுப்புகள் அந்தந்த பள்ளியினால் பதிவு (செய்யப்பட வேண்டும் என்றும் இப்பதிவினை சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் மற்றும் பெற்றோர் ஆசிரியா சங்கப் பிரதிநிதிகள் இருவரைக் கொண்ட குழுவால் அவ்வப்போது ஆய்வு செய்யப்பட வேண்டு.


👉இணைய வழி வகுப்புகள் நடத்துவது தொடாபாக முறையான வழிகாட்டுதல்களை வகுத்து வெளியிட பள்ளிக் கலவித் துறை ஆணையர், கல்லூரி கல்வி இயக்குநர், கணினி குற்றத் தடுப்பு பிரிவு மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடாபான காவல அலுவலாகள், கல்வியாளாகள் மறறும் உளவியல் நிபுணாகள் கொண் ட குழு அமைக்கப்படும் என்றும், அக்குழு, மாநிலத்திலுள்ள பள்ளிகள் மறறும் கல்வி நிறுவனங்களில் பாலியல் தொல்லைகள் தரப்படுவதை தடுப்பதற்கு உரிய வழிமுறைகளை பரிந்துரைக்கவும் இணையவழி வகுப்புகளை நெறிப்படுத்துவது குறித்தும் வழிகாட்டு நெறிமுறையினை ஒருவார காலத்திற்குள் சமாப்பிக்க வேண்டுமென்றும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார்


👉இணைய வகுப்புகளில் முறையற்ற வகையில் நடந்துகொள்வோர் மீது “போக்சோ” சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாணவ, மாணவிகள் தங்கள் புகார்களைத் தெரிவிக்க ஒரு Helpline  உருவாக்கவும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார்.

TN Press News No 160 Date :26.05.2021 

👉மேலும், இணைய வகுப்புகள் குறித்து வரும் புகார்களை மாநிலத்தின் கணினி குற்றத் தடுப்புக் காவல் பிரிவில் காவல் கண்காளிப்பாளா நிலையில் உள்ள அலுவலர்கள் உடனடியாக பெற்று சம்பந்தப்பட்ட மாணவ மாணவிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் விசாரித்து துரிதமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமெனவும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டார்கள்.