பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடர்பாக அனைவரிடமும் கருத்து கேட்டு 2 நாள்களில் முடிவு.

கொரோனா பெருந்தோற்றைக் கருத்தில் கொண்டு சிபிஎஸ் இ பொதுத்தேர்வை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்தது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்யலாமா? என்பது குறித்து இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனையில் அமைச்சர் அன்பில் மகேஷ், தலைமைச் செயலாளர் இறையன்பு, முதன்மைச் செயலாளர் உதயச்சந்திரன், பள்ளிக்கல்வி செயலர் காகர்லா உஷா, ஆணையர் நந்தகுமார், தேர்வுத்துறை இயக்குநர் உஷாராணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியதாவது


. +2 பொதுத்தேர்வை குறித்து முடிவு எடுக்கும் முன்பு கல்வியாளர்கள், மருத்துவ நிபுணர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், மாணவர் அமைப்பினர், ஆசிரியர்கள் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தி, அவர்களுடைய கருத்துக்களை 2 நாட்களுக்குள் தெரிவிக்கும் படி முதலமைச்சர் கூறியுள்ளார். அதேபோல் இரண்டு நாட்களுக்குள் மற்ற மாநிலங்களின் முடிவையும் அறிந்து கொண்டு, இறுதி முடிவை அறிவிக்க உள்ளோம். இதை எல்லாம் வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இறுதி முடிவை அறிவிப்பார் என தெரிவித்துள்ளார்.


tnschooledu21@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் கருத்துக்களை தெரிவிக்கலாம்.ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் கருத்துக்களை பகிரலாம்.

 14417 என்ற எண்ணுக்கும் தொடர்பு கொண்டு கருத்துக்களை தெரிவிக்கலாம்.