Learning Outcomes Training For Primary Middle and High School Teachers , Instructions and Schedule
10.01.2022 முதல் 1-10 வகுப்பு ஆசிரியர்களுக்கான கற்றல் அடைவுகள் சார்ந்த திறன் வலுவூட்டுதல் பயிற்சி. (Online- Hitech Lab Training) பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள்.
Primary_ Middle and High School Teachers Traing for Learning Outcomes_ Instructions and Training Schedule PDF
●08.01.2022 அன்று மாவட்ட அளவிலான கருத்தாளர்களுக்கான பயிற்சி
●10.01.2022 முதல் 02.02.2022 வரை -1 முதல் 5 வகுப்பு வரை உள்ள ஆசிரியர்கள்
இடைநிலை ஆசிரியர்களுக்கான கற்றல் அடைவு பயிற்சி தேதி:(ஜனவரி,பிப்ரவரி)
குழு I - 10,12,19,21,24,27,29,1
குழு II - 11,17,20,22,25,28,31,2
●03.02.2022 முதல் 25.02.2022 வரை -6 முதல் 10 வகுப்பு வரை உள்ள ஆசிரியர்கள்
பட்டதாரி ஆசிரியர்கள் கற்றல் அடைவு பயிற்சி தேதி: (பிப்ரவரி)
●தமிழ்: I - 3,5
II - 4,7
●ஆங்கிலம்: I - 8,10
II - 9,11
●கணிதம்: I - 12,15
II - 14,16
●அறிவியல்: I - 17,19
II - 18,21
●சமூகவியல்: I - 22,24
II - 23,25
தமிழ்நாட்டிலுள்ள மாவட்டங்களை மண்டலங்களாகப் பிரித்து, மண்டலங்களில் உள்ள பள்ளிகளில் இயக்குநர்கள், இணை இயக்குநர்கள் வகுப்பறை உற்றுநோக்கல் மற்றும் பள்ளிப் பார்வையினை மேற்கொண்டுவருகின்றனர்.
இந்நிலையில் மண்டல அளவில் தஞ்சாவூர்,திருநெல்வேலி, விழுப்புரம் ஆகிய மண்டலங்களில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் வகுப்பறை உற்று நோக்கல் சார்ந்து பெற்ற விவரங்களை ஆய்வு செய்தபோது, மாணவர்களுக்கு கற்றல் அடைவுகளை அடையச் செய்வதற்கான ஆசிரியர்களின் முயற்சிகளை வலுப்படுத்த வேண்டிய அவசியம் கண்டறியப்பட்டது.
தமிழ்நாட்டிலுள்ள தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளிலுள்ள ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான பாடவாரியான, மாநிலப் பாடத்திட்டத்திற்கான கற்றல் அடைவுகள் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் வரையறுக்கப்பட்டு அதனை மாணவர்களுக்கு அடையச் செய்வதற்கான கற்பித்தல் முறைகள் குறித்தும் ஏற்கெனவே பயிற்சி வழங்கப்பட்டுள்ளது
தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரைக் கற்பிக்கும் ஆசிரியர்கள்அனைவருக்கும் கற்றல் அடைவுகள் சார்ந்த வலுவூட்டல் பயிற்சி வழங்குவது இன்றியமையாததாகிறது.
முதற்கட்டமாக 08.01.2022 அன்று மாவட்ட அளவிலான கருத்தாளர்களுக்கான பயிற்சி இணைய வழியில் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் வழங்கப்படவுள்ளது.
பயிற்சி பெற்ற கருத்தாளர்கள் 10.01.2022 முதல் வட்டாரத் தலைமையிடத்தில் தெரிவு செய்யப்படும் உயர்நிலைப்பள்ளியில் அமைந்துள்ள உயர் தொழில் நுட்ப ஆய்வகத்தில் (High Tech Lab) ஆசிரியர்களுக்கான பயிற்சியினை வழங்குதல் வேண்டும்.
●10.01.2022 முதல் 02.02.2022 வரை -1 முதல் 5 வகுப்பு வரை உள்ள ஆசிரியர்கள்
●03.02.2022 முதல் 25.02.2022 வரை -6 முதல் 9 வகுப்பு வரை உள்ள ஆசிரியர்கள்
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..