TNSED Attendance App  Instruction 



பள்ளிக்கல்வி -அரசு/அரசு நிதியுதவி பெறும்‌ பள்ளிகளில்‌ செயலி வாயிலாக வருகைப்பதிவு மேற்கொள்ளல்‌ - அறிவுரைகள்‌

தமிழ்நாட்டில்‌ உள்ள அரசு/அரசு நிதியுதவி பெறும்‌ தொடக்க/நடுநிலை/ உயர்நிலை/ மேல்நிலைப்‌ பள்ளிகளில்‌ பணிபுரியும்‌ ஆசிரியர்கள்‌, ஆசிரியல்லாத பணியாளர்கள்‌ மற்றும்‌ மாணவர்களின்‌ வருகைப்பதிவுகள்‌ TNSED செயலி ( மூலம்‌ தற்போது பதிவேற்றம்‌ செய்யப்பட்டு வருகிறது. எளிமையான முறையில்‌ வருகையினை பதிவேற்றம்‌ செய்வதற்காக ஆசிரியர்களிடமிருந்து பெறப்பட்ட ஆலோசனைகளின்‌ அடிப்படையில்‌ வருகைப்பதிவுக்கென மட்டும்‌ தனியாக TNSED Attendance என்ற செயலி உருவாக்கப்பட்டு தஞ்சாவூர்‌ மாவட்டத்தில்‌ கடந்த 2 மாதங்களாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில்‌ வரும்‌ 01.01.2023 முதல்‌ இதனை பிற மாவட்டங்களுக்கும்‌ நடைமுறைப்படுத்திட தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்துமாறு அனைத்து முதன்மைக்‌ கல்வி அலுவலர்கள்‌ கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்‌.

TNSED ATTENDANCE APP Commission CIRCULAR Click Here 


User manual  click Here 


User video  Click here 


TNSED  Attendance App  New Version -Click Here 


◼️ஏற்கெனவே உள்ள பள்ளி/ஆசிரியர்களின்‌  User ID& Password  பயன்படுத்தி உள்நுழைவு செய்துகொள்ள வேண்டும்‌.

◼️உள்‌ நுழைவுக்குப்பின்‌  Fully Work day என முன்‌ இருப்புதகவல்‌  Default ஆக இருக்கும்‌. பள்ளி உள்ளூர்‌ விடுமுறை அல்லதுஅரை நாள்‌ வேலை நாள்‌ என்று இருப்பின்‌ அதற்குத்‌ தகுந்தவாறு மாற்றங்கள்‌ செய்து கொள்ள வேண்டும்‌.

◼️ஆசிரியர்கள்‌ மற்றும்‌ ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு இரு வேளைகள்‌ (முற்பகல்‌, பிற்பகல்‌) வருகைப்‌ பதிவுகள்‌ மேற்கொள்ள வேண்டும்‌

◼️புதிய செயலியில்‌ Csw மாணவர்களுக்கும்‌ வருகைப்‌ பதிவு மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

◼️புதிய செயலி Auto Suncஆகிவிடும்‌ என்புதால்‌, தனியாக Sync வேண்டிய அவசியம்‌ இல்லை.

◼️இணைய சேவை இல்லாத  நேர்வுகளில்‌ வருகைப்‌ பதிவேடு கைபேசியில்‌ (Device) பதிவாகும்‌. இணைய சேவை தொடர்பு ஏற்படும்போது அனைத்து தரவுகளும்‌ தானாகவே மற்‌ ஆகிவிடும்‌.

◼️இணைய சேவை இல்லாத internet Connection நேர்வுகளில்‌ வருகைப்‌ பதிவு மேற்கொண்ட பிறகு கீழ்க்காண்‌ நடைமுறைகளை தவறாதுபின்பற்றிடல்‌ வேண்டும்‌

  • Do not log out from the app
  •  Donot click on the sync
  • Donot clear the app data or app caches